Pages

Thursday, April 2, 2015

OM! NAMO NARAYANAYA

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம்,

மனதில் நினைத்துக் கொண்டு நூறு உருப்போட்டால் பஞ்சமாபாதகங்கள் செய்திருந்தாலும் அவை பஞ்சுபோல் மறைந்து விடும். அஷ்டாக்ஷரம் என்பது எட்டெழுத்தைக் குறிக்கும்.

ஓம் நமோ நாராயணாய 

ஓம் என்பது ஓரெழுத்தாகவும், நம என்பது இரண்டெழுத்தாகவும், நாராயணாய என்பது ஐந்தெழுத்தாகவும் ஆக மொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து நாராயண அஷ்டாக்ஷரம் எனப்படும். 


இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். தீமைகள், துன்பங்கள் தொடராது. முக வசீகரம் கிடைக்கும். எல்லாச் செல்வங்களும் கிட்டும். காலையில் இதை கூறுபவன் இரவில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். மாலையில் கூறுபவன் பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கிறான். உச்சிப்பொழுதில் கூறுபவன் ஐந்துவித மகா பாதகங்கள், உப பாதகங்களிலிருந்து விடுபடுகிறான். எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான். 

இது நான் கூறவில்லை. ஸ்ரீ மஹா நாராயண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
            |                                                                   |
ப்ராதரதீ4யாநோ  ராத்ரி க்ருதம் பாபம் நாயதி |
         |                                   |
ஸாயமதீ4யாநோ தி3வஸக்ருதம் பாபம் நாயதி |
                                           |
மாத்4யந்தி3நமாதி3த்யாபி4முகோ2sதீ4யாந:
                             ||
பஞ்சபாதகோப்பாதகாத்ப்ரமுச்யதே |
                                 |
ஸர்வ வேத3பாராயண புண்யம்  4தே |


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace