Pages

Monday, March 23, 2015

SERVICE - தொண்டு


தொண்டு செய்பவர்கள் தமக்கு எந்தவித லாபமும், பிரதிபலனும்  இல்லாத எண்ணத்தோடு தொண்டு செய்ய வேண்டும். அதே சமயத்தில் மற்றவர்கள் இதில் எவ்வளவு லாபம் அடைவார்கள் என்ற சிந்தைனையும் இருக்க கூடாது.   அதாவது இந்த தொண்டின் மூலம் இந்த பலன் கிடைக்கும் என்ற எண்ணமும் இல்லாமல் இருக்க வேண்டும்.   தொண்டு செய்பவர்கள் இது எல்லாம் ‘‘அவரவர்கள் எண்ணத்துக்கும், செயலுக்கும் உண்டான பயன்’, நம்மால் ஒன்றும்  இல்லை, எல்லாம் ‘ஈச்வர’ க்ருபை என்று நினைக்க வேண்டும்.  மற்றவர்கள் உடன் பிடிவாதமாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பலனுக்காகவும் செய்ய கூடாது.  தன்னால் எது நல்லது என்று தெரிகிறதோ அதை தெடர்ந்து செய்து கொண்டு பலன் அவர்களுக்கே போகட்டும் என்று விட்டுவிட வேண்டும்.  இப்படி செய்பவனே கர்ம மார்கத்தில் செல்பவனாகவும், கர்ம யோகியாகவும் கருதப்படுவான். 


இதனாலெல்லாம் என்ன பெரிய ப்ரயோஜனம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய ஸேது பந்தத்தில், ‘நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ணமுடியும்?’ என்று அது நினைத்ததா? அது பண்ணின ஸேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கே பெரிய உபகாரம் பண்ணி விட்டது ஸ்ரீராமனின் கருணையை, கர ஸ்பரிசத்தை ஸம்பாதித்துத் தந்துவிட்டது. இப்படி நாம் என்ன பண்ணி கிழிக்கப் போகிறோம்?’ என்று ஒதுங்கியில்லாமல், நம்மாலான தொண்டு செய்தால், மற்றவருக்கு நம்மால் நல்லது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நமக்கு ஈஸ்வரப் பிரஸாதம் கிடைத்து சித்த சுத்தி லபித்துவிடும்.
முன்னேயே நான் திரும்பத் திரும்பச் சொன்ன மாதிரி நம்முடைய தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும், அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் நிச்சயமாகக் குறையும். ஸங்கமாக எல்லாரும் சேருவதால் ஸமூஹத்தில் ஸெளஜன்யம் உண்டாகும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே, அது போதும்! இந்த ஈரம், அன்பு, அருள் பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும். பகவானிடத்தில் பக்தி வரவேண்டும், அவனருள் கிடைக்க வேண்டும்என்றால் எப்படி வரும்? பரோபகாரம் பண்ணி மனஸ் பக்குவமானால்தான் நிஜ பக்தி வரும். ஈஸ்வராநுக்ரஹமும் வரும்.
அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும்.
                                - Kanchi Mahaperiava Swamigal

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace